இன்று நான்காவது டி 20 போட்டி…. தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?

வியாழன், 18 மார்ச் 2021 (07:44 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நான்காவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. அதே போல இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை இதுவரை அமைத்துக் கொடுக்கவில்லை. நடுவரிசையிலும் கோலியை தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ஸ்கோர்களை சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். பந்துவீச்சிலும் இதுவரை ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து அணியை ஆல் அவுட் ஆக்கவில்லை. பீல்டிங்கிலும் பல கேட்ச்களை இந்திய அணி விட்டு சொதப்பியுள்ளது. இதையெல்லாம் சரிசெய்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்