இதில் முதலில் பேட் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சேவாக் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து சென்றார். அதன் பின்னர் சச்சின் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் 10க்கு குறையாமல் சென்றது. கடைசி நேரத்தில் யூசுப் பதான் மற்றும் யுவராஜ் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. அதிரடியாய் விளையாடிய யுவி 20 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதில் 6 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.