உலகின் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்தியாவில்..! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

புதன், 17 மார்ச் 2021 (10:19 IST)
உலகின் மிகவும் மாசுபாடு அடைந்த நகரங்கள் குறித்த ஆய்வில் பெரும்பான்மையான நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக வெளியான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் சுற்றுசூழல் மாசுபாடு அடைந்து வரும் நிலையில் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுசூழல் மாசுபாடு தொடர்பாக பல்வேறு நாடுகளும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் அதிக மாசுபாடு கொண்ட 30 நகரங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக மோசமான சுற்றுசூழல் மாசு கொண்ட உலக தலைநகரங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்