உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கிரிக்கெட்டை தவிர்த்து வருகிறார். இராணுவத்திற்கு சென்று சிறிது காலம் பயிற்சி எடுத்தவர், தற்போது குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐ முன்னாள் தலைவரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான சீனிவாசன் சிஎஸ்கே அணி குறித்து பேசினார். அப்போது அவர் ”சிஎஸ்கே அணி இரண்டு வருடங்களுக்கு தடை செய்யப்பட்ட போது பொறுமையாக காத்திருந்தோம். 2018ல் மீண்டும் களம் இறங்கியபோது சிஎஸ்கேவும், தோனியும் வெற்றிக்காக வெறித்தனமாக காத்திருந்தார்கள். அவர்களால்தான் அந்த வெற்றி சாத்தியமானது” என்று பேசியுள்ளார்.