விராத் கோஹ்லி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்: டுபிளஸ்சிஸ் நம்பிக்கை

புதன், 27 ஏப்ரல் 2022 (13:17 IST)
விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என பெங்களூர் அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 
 
ஐபிஎல் 2022 தொடர்களில் ஜொலிக்காத வீரர்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விராத் கோலியின் பேட்டிங் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வரும் நிலையில் கேப்டன் டுபிளஸ்சிஸ் கூறியதாவது:
 
விராத் கோஹ்லியிடம்  சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் விராட் கோஹ்லி மட்டுமல்ல சிறந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் இத்தகைய சூழ்நிலையை சந்தித்து தான் ஆக வேண்டும் என்றும் கூறினார் 
 
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில போட்டிகளை வைத்து விராட் கோலியை எடை போட கூடாது என்றும் அவர் விரைவில் நல்ல ஃபார்முக்கு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்