மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு பிரத்யேகமான கைப்பந்து போட்டி!

Webdunia
சனி, 25 மே 2019 (11:26 IST)
ஜப்பானில் மாற்றுத்திறனாளி வீராங்கனைகளும் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில்  அமர்ந்து கொண்டே கைப்பந்து போட்டி விளையாடும் அளவிற்கு பிரத்யேகமான போட்டி நடைபெற்றது.
 
உலகத்திலேயே முரண்பாடுகள் கொண்ட ஒரு நாடாக பார்க்கப்படுவது ஜப்பான். காரணம், உலகத்தில் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விடயங்கள், பழக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அங்கு நிகழ்த்தி காட்டி சாதனை படைப்பார்கள். 
 
அந்தவகையில்,  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுதிறனாளி வீராங்கனைகள் அமர்ந்த நிலையில் கைப்பந்து விளையாடும் டோர்னமென்ட் ஒன்றை ஜப்பான் நடத்தி வருகிறது. அங்கு வரும் 2020ம் ஆண்டு பாராஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு விளையாட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில், ஜப்பான் வீரர்களுக்கு பிரத்யேகமான பயிற்சிகள் அளித்து வருகிறது. 
 
இப்போட்டியில் சீனா, கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நடுவர்களும், பள்ளி குழந்தைகளும் உற்சாகமூட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்