மீண்டும் குல்தீப்பிடம் சிக்கிய இங்கிலாந்து!

வியாழன், 12 ஜூலை 2018 (18:19 IST)
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் குல்தீப் யாதவ்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிந்து தற்போது ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து விளையாடி வருகின்றன.
 
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே ராய் வெளியேறினார். 
 
இதைத்தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய இரண்டாவது இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியின் ஆபத்தமான பேட்ஸ்மேன்கள் ராய், பேர்ஸ்டவ் மற்றும் ரூட் ஆகியோர் வெளியேறினர்.
 
இனி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எளிதாக கட்டுப்படுத்தி விடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்