இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

வியாழன், 12 ஜூலை 2018 (17:09 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
 
முதல் ஒருநாள் போட்டியில் தற்போது இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச  முடிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இந்த போட்டியில் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்