இரண்டாவது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும் இங்கிலாந்து!
திங்கள், 27 டிசம்பர் 2021 (13:02 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து விட்டது
கடந்த 26ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து 267 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது \
இதனை அடுத்து 82 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் தனியாக நின்று போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.