காமன்வெல்த் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:33 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து!
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் அதில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின
 
 இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. 
 
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது
 
இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. ஏ பிரிவில் இந்திய மகளிர் அணி முதலிடத்தில் உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்