எல்லா பதக்கங்களிலும் மூன்று.. 6வது இடத்தில் இந்தியா! – Commonwealth Games 2022!
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:27 IST)
லண்டனில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பிரிவிலும் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் லண்டனில் கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. போட்டியின் 4வது நாளான நேற்று மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இறுதி சுற்றுவரை சென்ற இந்திய வீராங்கணை சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
அதேபோல 60 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் யாதவ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனால் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று காமன்வெல்த் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது.