காமன்வெல்த் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (19:03 IST)
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி மிக அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்த. ஆனால் அந்த அணி 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் அடித்து மிக எளிதாக வெற்றி பெற்றது ஸ்மிரிதி மந்தனா மிக அபாரமாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து இந்த தொடரில் இந்திய அணி 2 புள்ளிகள் பெற்று தற்போது ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்