இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும், அதனை அடுத்து கடந்த 16ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதும் தெரிந்ததே
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது
இந்த நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அவ்வப்போது மழைவிட்டாலும் மைதானத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் ஆட்டம் நடைபெறவில்லை. பின்னர் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் மூன்றால் நாள் ஆட்டம் ரத்து என அம்பயர்களால் அறிவிக்கப்பட்டது. மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஒரு இன்னிங்ஸ் கூட இன்னும் முடியாததால் இந்த டெஸ்ட் டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.