சென்னையில் 24 மணி நேரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு...

சனி, 18 ஜூலை 2020 (23:05 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுக்க ஒன்றைரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மகக்ள் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு இந்தத் தொற்றைக் கட்டுப்பட்டுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில்,  சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு திங்கட்கிழமை வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளதாவது :

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (18-07-20) இரவு முதல் 20 -07-20 திங்கட்கிழமை காலை 6:00 வரை தமிழக அரசு எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துகடைகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்த்திகள், இவை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

அதனால் பொதுமக்கள தேவையின்றி வெளியேவராமலும், சமூக இடைவெளி இன்றி கூடி நிற்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்