ரூ.150 கோடி எங்கே? ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தோனி

வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக ரூ.150 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல்2018 தொடரில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விளம்பர படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது.
 
ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த தோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி அவருக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை. இதனால் தோனி அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
ஒப்பந்தம்படி அமரப்பள்ளி நிறுவனம் தோனிக்கு சுமார் ரூ.150 கோடி வழங்க வேண்டும். சுமார் 6 முதல் 7 வருடங்கள் தோனி இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்