கிரிக்கெட் வீரர்களை பொதுவாக 3 முக்கிய கிரேடிங்கில் வகைப்படுத்துவர். அவை எ, பி, சி. இதில் கிரேங்கிற்கு ஏற்ப சலுகைகளும், சம்பளமும் வீரர்களுக்கு வழங்கபப்டும். ஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடி. ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.
பி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படுகிறது. பி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட 9 வீரர்கள் உள்ளனர். சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடி வழங்கப்படுகிறது. சி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தோனியை ஏ+ வீரர்கள் பட்டியலில் இணைக்க பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தோனியின் சலுகைகள், சம்பளம், ஐசிசி ரேட்டிங் ஆகியவை பாதிக்கக்கூடும் என தெரிகிறது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஏ+ கிரேட் கொடுப்பதற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால், அவருக்கு எதற்கு உயர்ந்த கிரேட் என பல கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.