நியுசிலாந்து vs இங்கிலாந்து… முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்!

வியாழன், 3 ஜூன் 2021 (13:09 IST)
இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் நியுசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் சேர்த்துள்ளது.

டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. நியுசிலாந்து அணியின் தொடக்க ஜோடி 58 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை தொடங்கியது. டாம் லாதம் 23 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின்னர் வந்த ராஸ் டெய்லரும் 14 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

மறுமுனையில் நங்கூரமாக நின்ற டெவென் கான்வாய் சிறப்பாக விளையாடி சதமடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். 240 பந்துகளில் 136 ரன்களை சேர்த்தார். மற்றொரு வீர்ர நிக்கோல்ஸ் 46 ரன்களோடு களத்தில் உள்ளார். நியுசிலாந்து அணி முதல்நாளில் 3 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் சேர்த்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்