ஆகஸ்ட் 20 ல் துபாய்க்கு செல்லும் சி எஸ் கே அணி!

வெள்ளி, 23 ஜூலை 2021 (17:42 IST)
எஞ்சிய ஐபிஎல் தொடரை முடிப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்க்கு பயணம் செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதில் கலந்துகொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தில் தோனி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்