சிஎஸ்கே அணி அபார வெற்றி. ஆனாலும் லக்னோ தான் புள்ளிப்பட்டியலில் டாப்.. எப்படி?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:47 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்ற போதிலும் புள்ளி பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்தில் உள்ளது என்பதும், லக்னோ 3வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணிய விளையாடிய நிலையில் மொயின் அலி அபாரமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அந்த அணி20 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர், லக்னோ, குஜராத், பஞ்சாப், சிஎஸ்கே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தாலும் லக்னோ அணி முதல் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்