நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி ஆட்டம்.. 46 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்!

Siva

புதன், 9 அக்டோபர் 2024 (21:26 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் மோதுகின்றன.

இந்திய அணி பேட்டிங் செய்ததில், 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் அபார அரைசதம் அடித்துள்ளனர்.

தற்போது, வங்கதேச அணி 222 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது. ஆனால், முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகிய நிலையில், வங்கதேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 13 ஓவர்களில் 176 ரன்கள் தேவை என்பதால், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்