தமிழக போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர் !

திங்கள், 1 ஜூன் 2020 (19:15 IST)
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதி எஸ்.பி. விஜயகுமாருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் பகுதி எஸ்.பி.விஜயகுமார் மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துகளை கேட்பதற்காக Feedback Call என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சுரேஸ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

அற்புதமான தொடக்கத்தை எஸ்.பி.விஜயகுமார் தொடங்கியுள்ளார். இந்தப் பணி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Wonderful initiative by @sp_tirupathur. This will surely enable the police to work on refining the processes further & be more reaponsive towards the citizens. https://t.co/tssW7536Iy

— Suresh Raina

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்