பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு !

திங்கள், 1 ஜூன் 2020 (18:59 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன்  பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில தொழில்துறையினரும் அரசு விதித்துள்ள விதிமுறை அறிவுத்தல்களுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்