காமன்வெல்த் போட்டிகள்: ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (19:00 IST)
ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி நாளை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர்.
 
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 474 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்து வருகிறது.
 
இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 16 முறை பங்கேற்று 155 தங்கம் உள்பட 438 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக 101 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்