இந்நிலையில் இந்த முடிவை அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதில் “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. முதலில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினார்கள். இதுபோன்ற புதுமுயற்சிகள் எடுத்தால் அந்த வீரருக்கு 5 போட்டிகளாவது வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.