சொந்த மண்ணில் கடைசி போட்டி… விடைபெற்றார் பிராவோ!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
நேற்று நடக்க இருந்த போட்டிதான் சொந்த மண்ணில் பிராவோவின் கடைசி போட்டியாக இருந்தது.

வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்று கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இப்போது பாகிஸ்தானோடு டி 20 தொடர் நடைபெற்றது. இதற்கு பின்னால் வெஸ்ட் இண்டீஸில் எந்தவொரு டி 20 தொடரும் இல்லை. இந்நிலையில் நேற்று நடக்க இருந்த போட்டிதான் அவரின் கடைசிப் போட்டி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவரால் இனிமேல் சொந்தமண்ணில் எந்த போட்டியிலும் விளையாட முடியாமல் ரசிகர்களுக்கு பிரியாவிடைக் கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்