கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வு… பென் ஸ்டோக்ஸ் அதிரடி முடிவு!

சனி, 31 ஜூலை 2021 (10:57 IST)
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காலவரையற்று சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் பில்லராக இருந்து வருபவர் பென் ஸ்டோக்ஸ். அல்ரவுண்டராக ஜொலிக்கும் அவர் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் முக்கியமான வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மன நலத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக காலவரையற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதை அந்த அணியின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்