வங்கதேசம் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (04:03 IST)
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி இறுதிப்போட்டிக்கு தகுதி இந்தியாவுடன் மோதவுள்ளது.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்த்ஹன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேஅ அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று நாளை இந்திய அணியுடன் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்