சென்னையில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (12:38 IST)
வரும் 29ம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் சேலம், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு   வாய்ப்பு என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யபப்ட்டு வருகிறது. மேலும் அக்டோபர் 27,28-ல் மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதேபோல் கர்நாடகா மாநிலத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்