இந்தியாவுக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா 365 ரன்கள் சேர்த்து 160 ரன்கள் முன்னிலைப் பெற்றது.