இன்னிங்ஸ் தோல்வி அடையுமா இங்கிலாந்து? 4 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன!

சனி, 6 மார்ச் 2021 (13:34 IST)
இந்தியாவுக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 24 ஓவர்களில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது
 
கேப்டன் ரூட் மட்டும் பொறுப்புடன் விளையாடி வருகிறார் என்பதும் அவர் 70 பந்துகளில் 29 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாட்கள் முழுதாக இருக்கும் நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 102 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்