இன்னிங்ஸ் தோல்வி அடைகிறதா ஆஸ்திரேலியா? 67 ரன்களுக்கு 7 விக்கெட்..!

சனி, 11 பிப்ரவரி 2023 (13:50 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடையும் நிலையில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக உள்ளது. 
 
முதல் இன்னிங்சில் 177 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அடித்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மாவின் சதம் மற்றும் அக்சர் பட்டேலின் அதிரடி ஆட்டம் காரணமாக 400 ரன்கள் எடுத்தது. 
 
இதனை அடுத்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில் தற்போது ஏழு விக்கெட்டைகளை இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 156 ரன்கள் பின் தங்கிய நிலையில் கையில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஜடேஜா அசத்தி ஐந்து விக்கெட் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் இன்றே ஆட்டம் முடிவடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்