கோலியின் விக்கெட் சிறந்த பந்து அல்ல- ஆஸி கிரிக்கெட் வீரர் டாட் மர்ஃபி மகிழ்ச்சி

சனி, 11 பிப்ரவரி 2023 (09:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான டாட் மர்ஃபி 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் டாட் மர்ஃபி. இந்த போட்டியில் அறிமுகம் ஆகியுள்ள இளம் பந்துவீச்சாளரான டாட் மர்பி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த இன்னிங்ஸில் கே எல் ராகுல், அஸ்வின், கோலி, புஜாரா மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

போட்டி முடிந்ததும் பேசிய மர்ஃபி “இந்த போட்டியில் அறிமுகம் ஆகும் போது ஒரு விக்கெட் வீழ்த்தினால் போதும் என நினைத்தேன். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் செய்ததை இந்த போட்டியில் செய்தால் போதுமென அறிவுறுத்தப் பட்டேன்.  எனது நீண்ட நாள் ஹீரோவான கோலியின் விக்கெட்டை எடுத்தது சிறப்பான ஒன்றாகும்.  அவரின் விக்கெட்டைக் கைப்பற்றிய பந்து சிறப்பாக வீசப்பட்ட பந்து அல்ல. ” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்