அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது தாக்குதல்; கோபத்தில் மெஸ்சி செய்த மாஸ் சம்பவம்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (11:46 IST)
ஃபிஃபா உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியை காண வந்த அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் எப்படி கிரிக்கெட் மக்களுக்கு பெரும் பித்தோ அதுபோல கால்பந்தை தீவிரமாய் நேசிக்கும் நாடுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகள் முதன்மையானவை. அதில் முக்கியமான இரண்டு நாடுகள் அர்ஜெண்டினா, பிரேசில். அண்டை நாடுகளாக இருந்தாலும் கால்பந்து என்று வந்துவிட்டால் சண்டை மயம்தான்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான குவாலிஃபயர் போட்டிகள் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் அர்ஜெண்டினா – பிரேசில் நாட்டு கால்பந்து அணிகளுக்கு இடையேயான தகுதி சுற்று போட்டி இன்று பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் தொடங்கியது.



அப்போது இருநாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டு வந்தபோது பிரேசில் ரசிகர்கள், அர்ஜெண்டினா ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகியுள்ளது. இதனால் பிரேசில் போலீஸார் அர்ஜெண்டினா ரசிகர்களை தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த அர்ஜெண்டினாவின் பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மைதானத்தை விட்டு தன் அணியினருடன் வெளியேறினார்.

இதனால் பரபரப்பு எழுந்த நிலையில் ரசிகர்கள் சமாதானம் செய்யப்பட்டு பின்னர் மெஸ்ஸியும் அணியினரும் உள்ளே வந்து விளையாடியுள்ளனர். அரை மணி நேரம் தாமதாம தொடங்கிய இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி பிரேசிலை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்