இலங்கையில் நடக்கவிருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இடமாற்றமா?

புதன், 20 ஜூலை 2022 (14:58 IST)
இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இலங்கையில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆகியோர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. எனவே இந்த முறையும் இந்தியா வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்