ரணில் வெற்றிக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: ராஜினாமா செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

புதன், 20 ஜூலை 2022 (14:51 IST)
இலங்கையின் புதிய அதிபர் தேர்வு செய்ய இன்று வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று புதிய அதிபராக உள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே என்ற தகவல் பரவியதும் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது 
 
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மீண்டும் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
ரணில் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கொழும்புவில் போராட்டக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்