இலங்கையின் புதிய அதிபரானார் ரணில் விக்ரமசிங்க!

புதன், 20 ஜூலை 2022 (13:28 IST)
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14 ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளுக்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  6 முறை பிரதமராக இருந்தவர் முதல்முறையாக இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்