இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையீடா? இந்திய தூதரகம் விளக்கம்

புதன், 20 ஜூலை 2022 (14:57 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்ற நிலையில் அவரது தேர்வில் இந்தியத் தலையீடு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது. அயல்நாட்டு விவகாரம் மற்றும் ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலில் இந்தியா தலையிடுவதில்லை என்று அதேபோல் இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது
 
இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவின் ஆதரவாளர் என்பதால் இந்தியா அவருக்கு மறைமுகமாக உதவி செய்தது என்று கூறப்பட்ட தகவலை இந்திய தூதரகம் முழுமையாக மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்