ஆண்கள் அணிக்கு கிடைத்ததை போல, மகளிர் அணிக்கு வெற்றி பேரணி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப்பதிலளித்த பிசிசிஐ செயலாளர் தேபாஜித் சைகியா, தற்போதுவரை எந்த பேரணிக்கும் திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார். ஐ.சி.சி. கூட்டத்திற்காக துபாய் சென்றுள்ளதாகவும், திரும்பி வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதி போட்டியில், தீப்தி ஷர்மா அரை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 87 ரன்கள் குவித்ததுடன், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை வென்றார்.