ரூட்டைத் தவிர எல்லோரும் காலி… வெற்றி விளிம்பில் இந்தியா!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:23 IST)
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தங்கள் விக்கெட்டை இழந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி விளிம்பில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போது இங்கிலாந்து அணி தனது பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எல்லாம் இழந்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே இப்போது அந்த அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். இங்கிலாந்து அணி தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 113 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நான்காம் நாளான இன்றே இந்திய அணி இமாலய வெற்றி பெற வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்