கடந்த ஆண்டில் முறையற்ற ரயில் பயணம்… 144 கோடி ரூபாய் அபராதம்!

செவ்வாய், 8 ஜூன் 2021 (07:27 IST)
கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் ரயில் போக்குவரத்து முழுமையாக இல்லாத போதும் முறையற்ற பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்துக்கும் மேல் உள்ளது.

இது சம்மந்தமாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதை கேட்க, அதற்கு வெளியான பதிலில்தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டிக்கெட் இல்லாமல், மற்றும் முறையான டிக்கெட் இல்லாமல் சுமார் 27.57 லட்சம் பேர் பயணம் செய்து பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை மட்டும் சுமார் 144 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த அபராதத் தொகை 561 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்