தமிழ் சினிமாவின் மிக இளம் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன். 21 வயதிலேயே தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படமும் நல்ல வெற்றி பெற்றதை அவர் மேல் கவனம் குவிந்தது. இதனால் அவருக்கு கௌதம் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த படம் ரிலிஸாகாமல் உள்ளது. அதற்கு தயாரிப்பாளர் கௌதம் மேனனின் பொருளாதார சிக்கல்களே காரணம் என சொல்லப்படுகிறது.
அதையடுத்து அவர் இயக்கிய மாஃபியா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்போது அவர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் என் முதல் படம் ரிலீஸான போது நான் இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்த போது உடனடியாக அடுத்த படம் பண்ணாதே. இன்னும் நிறைய பயணம் செய். நிறைய தெரிந்துகொள். அதன் பிறகு படம் செய்யலாம் எனக் கூறினார். ஆனால் நான் எனக்கே உரிய வேகத்திலும் ஆர்வத்திலும் அவரின் அறிவுரையை ஏற்கவில்லை. நரகாசூரன் ரிலிஸாகாத அதிருப்தியில் உடனடியாக அடுத்த படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாபியா படத்தை எடுத்தேன். இப்போது நினைக்கும் போது வெற்றிமாறனின் அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.