முதல்முறையாக கோப்பையை ஏந்திய மெஸ்ஸி; கதறி அழுத நெய்மார்! – கோப்பா அமெரிக்கா வரலாற்று தருணம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (09:29 IST)
புகழ்பெற்ற கோப்பா அமெரிக்கா இறுதி போட்டியில் ப்ரேசிலை அர்ஜெண்டினா வென்ற நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

உலக புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோப்பா அமெரிக்கா போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று இறுதி போட்டியில் பிரேசில் – அர்ஜெண்டினா அணிகள் மோதின. பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் நெய்மாரும், அர்ஜெண்டினாவின் மெஸ்சியும் ஒரே போட்டியில் எதிரெதிராக மோதுவதால் எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.

அதேசமயம் இரு அணிகளும் ஈடு கொடுத்து ஆடியதால் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியாவின் கோலை தவிர்த்து வேறு கோல்கள் பதிவாகவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜெண்டினா.

இதுவரை கோப்பா அமெரிக்காவில் 17வது முறையாக அர்ஜெண்டினா வெல்லும் கோப்பை இதுவாகும். கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா முதல்முறையாக கோப்பையை வெல்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்சி விளையாடி வரும் நிலையில் முதல்முறையாக அவர் தலைமையில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றுள்ளது. பிரேசிலின் அதிர்ச்சி தோல்வி ரசிகர்களையே உலுக்கிய நிலையில் நட்சத்திர வீரர் நெய்மார் கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க செய்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்