என்னை அவமதித்து அழவைத்து விட்டனர்… பஞ்சாப் அணி மேல் குற்றச்சாட்டு வைத்த கெய்ல்!

vinoth

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (08:21 IST)
ஐபிஎல் தொடரில் அதிக தாக்கம் செலுத்திய வீரர்களில் கிறிஸ் கெய்லும் ஒருவர். பெங்களூர் அணிக்காக அவர் விளையாடிய ஆண்டுகளில் சிக்ஸர் மழை பொழிந்து ஐபிஎல் போட்டித் தொடரை பொழுதுபோக்கின் உச்சமாக ஆக்கினார். சொல்லப்போனால் ஐபிஎல் தொடரை உலகளவில் கொண்டு சென்றதில் கெய்லின் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் பெங்களூர் அணியால் கழட்டிவிடப்பட்டு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த அணிக்காக விளையாடிய போது அவர் நிறைய போட்டிகளில் விளையாடவைக்கப்படவில்லை. இதனால் அவர் திடீரென ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் “பஞ்சாப் அணி ஒரு சீனியர் வீரரான என்னை- ஐபிஎல் தொடருக்கு அளித்த பங்களிப்பைப் பார்க்காமல் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினர். என்னை அவர்கள் நடத்திய விதம் முதல் முதலாக என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியது. நான் உண்மையிலே அழுதேன். அதன் பிறகுதான் நான் ஓய்வை அறிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்