தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை போன்ற சர்வதேசத் தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இந்த தோல்விகளின் மூலம் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறுகிறது.
நேற்று பாகிஸ்தான் அணிக்கெதிரானத் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் டுப்ளஸ்சி ‘நாங்கள் பொறுப்போடு விளையாடவில்லை என்பதை இந்த தோல்விகள் வெளிக்காட்டுகின்றன. மோசமான பந்துவீச்சு மற்றும் மோசமான பேட்டிங்கை நாங்கள் வெளிப்படுத்தினோம். தென் ஆப்பிரிக்கா அணி இதுபோல் லீக் சுற்றுகளோடு வெளியேறுவது அவமானகரமாக உள்ளது. மக்கள் எங்களை விமர்சிக்க முழுத் தகுதியுடையவர்களாவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் அடுத்த போட்டி என்று வரும் போது செய்த தவறையே மீண்டும் செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.