மும்பைக்கு கொல்கத்தா கொடுத்த இலக்கு இதுதான்: வெற்றி யாருக்கு?

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (17:29 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் ஆன போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
 
அந்த அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் அடித்துள்ளார். 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் 186 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாட உள்ளது. மும்பை அணியில் இன்று ரோகித் சர்மா இல்லாத நிலையில் இந்த இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்