முதல்ல ரின்கு சிங்கை சமாளிப்பாங்களா பாப்போம்! – ஹோம் க்ரவுண்டில் மும்பை அணி!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (12:26 IST)
ஐபிஎல் லீக் போட்டிகளில் இன்று பிற்பகல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.

16வது ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி இந்த சீசனில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

மும்பை அணிக்கு வழக்கம்போல ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வந்தாலும் மும்பை அணி வீரர்களுக்கு உத்வேகம் பெரிதாய் இல்லாதது போல தோன்றுகிறது. கடந்த ஐபிஎல் சீசன்களில் இறங்கி கலக்கிய சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டக் அவுட் ஆகி ரசிகர்களை அப்செட் செய்து வருகிறார்.

சரி மற்ற க்ரவுண்ட் மேட்ச் எப்படி போனாலும் சொந்த க்ரவுண்ட் மேட்ச்சில் வென்றே ஆக வேண்டும் என்ற எழுதாக் கொள்கையையாவது மும்பை பின்பற்றுமா என எதிர்பார்த்த நிலையில் சிஎஸ்கே அணியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த Great Rivalry ல் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவியது மும்பை.

இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. அதுவும் பார்க்கும் அணிகளுடன் எல்லாம் மோதி தோற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இன்று பிற்பகல் போட்டியில் தனது ஹோம் க்ரவுண்டான வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனிலும் நல்ல ஃபார்ம் காட்டி வரும் கொல்கத்தா அணி இதுவரையிலான 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என்ற சமநிலையில் உள்ளது.

சமீபமாக கொல்கத்தா அணியிலிருந்து களமிறங்கி கலக்கி வரும் ரின்கு சிங் இந்த போட்டியிலும் தனது தாறுமாறான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிடம் ஹோம் க்ரவுண்டில் இழந்த பெயரை அதே ஹோம் க்ரவுண்டில் இன்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்