ஜனவரி 19 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் அவர் வீசிய பந்து 175 கி.மீ வேகத்தில் வந்ததாக பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் கைவசமிருந்த 17 ஆண்டுக்கால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளார். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது அக்தர் வீசிய ஒரு பந்து 163.1 கி.மீ எனப் பதிவானது. இதுவே இன்றளவும் உலகின் மிகவேகமான பந்தாக கருதப்பட்டு வருகிறது.