12 வருசத்துக்கு முன்னாள் இப்படித்தான் ஆச்சு: வங்கதேசம்- இந்தியா மோதல்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:19 IST)
இன்று நடைபெறும் இந்தியா- வங்க தேச மோதல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் வங்கதேசம் அரையிறுதிக்கு அருகில் செல்ல வாய்ப்புள்ளது.

இன்று நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது. இதுவரை இந்தியா விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. தற்போது 11 புள்ளிகளுடன் இந்தியா தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும்.

2007ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் வங்க தேசத்துக்கும், இந்தியாவுக்கும் இதே போல் ஒரு ஆட்டம் நடந்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா அடிக்காமல், மரண அடி வாங்கியது. வங்க தேசத்தின் சுழற்பந்துகள் இந்தியாவை சிதறடித்தன. ராகுல் ட்ராவிட், சச்சின், சேவாக் போன்ற முன்னனி கிரிக்கெட் நாயகர்கள் 10, 15 ரன்களுக்கெல்லாம் விக்கெட் இழந்து வெளியேறினர். தோனி, அகர்கர் போன்றவர்கள் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார்கள். 2007ம் ஆண்டு உலகக்கோப்பையில் மொத்த ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றது.

இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக பதிந்தது. அந்த கருப்பு புள்ளியை பதிய வைத்தவர்களை எதிர்த்துதான் இன்று இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.

வங்கதேசம் நல்ல வலுவான நிலையில் உள்ளனர். வங்கதேச வீரர் ஷஹிப் அல் ஹசன் உண்மையாகவே இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கர சவாலாக இருப்பார். இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் 2 அரைசதங்கள், 2 சதங்கள், 10 விக்கெடுகள் பெற்று ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.

அன்று இந்தியா 50 ஓவர் முடிவதற்குள் 191 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவுட் ஆனது. ஆனால் இன்று இந்தியா தன்னை ரொம்பவே வலுப்படுத்தி கொண்டுள்ளது. பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்