நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வருவதால் கிரகதோஷங்கள் விலகுமா...?

Webdunia
லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம்.நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள். குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.
 
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம்.வருமானம் அதிகரிக்கும்.
 
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
 
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஒற்றுமையுடன்  அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
 
பித்ரு தோசம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும். வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.
 
வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்