ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானதாக உள்ளதின் காரணம் என்ன...?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (16:29 IST)
அன்னை சீதா தேவியை காண ஆஞ்சநேயர் இலங்கையை சுற்றி வந்தபோது, ராவணனின் வீரர்கள் வைத்த நெருப்பு இவரை ஒன்றம் செய்யவில்லை. இருந்தாலும், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் அவருடைய உடல் சூடானது. 

அதோடு, ராவணனை எதிர்த்து ஸ்ரீராம பிரானும், லட்சுமணரும் போரிட்ட போது, ஆஞ்சநேயரும், தன்னுடைய வானரப் படைகளோடு சேர்ந்து ராவணனின் படையுடன் போரிட்டார்.
 
ஆஞ்சநேயர் பிரமாண்டமான தோற்றத்தில் இருந்தைப் பார்த்த இலங்கை வீரர்கள், அவர் மீது பல்வேறு வகையான கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள் உண்டானது.
 
போரில் ராவணனைக் கொன்று, ஸ்ரீராம பிரான் சீதா தேவியை சிறையிலிருந்து மீட்ட உடன், இருவரையும் பணிந்து வணங்கினார் ஆஞ்சநேயர். அப்போது அவருடைய உடல் முழுவதும் இருந்த காயங்களைப் பார்த்து பதறி வேதனை அடைந்தார். உடனேயே, தாயுள்ளம் கொண்ட அன்னை சீதா தேவி, வெண்ணெயைக் கொண்டு ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் பூசிவிட்டார். இதனால், அவரின் உடலில் இருந்து காயங்கள் மறைந்ததோடு, அவரின் உடலில் இருந்த வெக்கையும் தணிந்தது. 
 
அன்னை சீதா தேவியின் செயலால் மனம் நெகிழ்ந்த ஆஞ்சநேயர், தனக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களின் நோய் ஸ்ரீராம பிரானின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து ஆஞ்சநேயரை தரிசிக்க செல்பவர்கள் வெண்ணெயை அவர் மீது சாற்றி வழிபடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்